(00) 91 - 960 0983 103

Marriage Match

Matching of the two horoscopes are called "Porondam" and it's closest English meaning I can give for this word is feasibility. Definitely this is one of the earliest feasibility studies known to the mankind. Our ancestors though they lived thousand of years before us, clearly understood the influential factors in a long term relationship and feasibility factors or porondams were matched accordingly. As you see the most of these factors are valid even in the present day society. When matching two horoscopes it is possible to match either 8, 10 or 20 separate aspects. Out of those aspects, eight are the most important. Those 8 are called "Ashta Kutaya" or "Ata Porondama". It is also possible to expand the 8 aspects to 10 aspects and match those, then such a matching is called "Dasa Porondama" or ten feasibilities. Included aspects are Nakshtra /Gana /Mahandra /Stree-Dheerga /Yoni /Rashi / Rashyadpathi /Vasya /Rajju & Vedha Porondam. Out of these 10 considerations at least five must be favorable for the couple to be compatible.

The most comprehensive tallying is "Visi Porondama" That is when you are tallying all 20 aspects and scrutinizing them to check whether they are matching with each other. Usually it takes years of close relationship with a person to make a good judgement about him, but if you have his horoscope you can get the same knowledge about that person in a matter of an hour. Therefore the matching of the horoscopes can be considered as vital for a successful marriage.Therefore the matching of the horoscopes can be considered as vital for a successful marriage. The aspects taken in to account are the following and the first 10 aspects mentioned are the Dasa Porondam: 1.Nakath (Nakshtra) Porondama,2.Gana (Type) Porondama,3.Mahendra Porondama, 4.Stree Deerga Porondama,5.Yoni Porondama,6.Rashi Porondama,7.Rasi Adhipathi (Load of the Sign) Porondama,8.Vashi Porondama

அஷ்ட மங்கள பிரசன்னம்

ஒருவர் எந்த நேரத்தில் – எந்த நோக்கத்தில் கேள்வி கேட்கிறாரோ அதற்குண்டான விடையை இந்த பிரசன்னத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.ஒருவருடைய ஜனனகால ஜாதகத்தில் கிரக நிலைகள் நன்றாக இருந்தும் தசாபுத்தி, அந்திரங்களும் நல்ல நிலையில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு நல்லது நடக்காமல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் அதற்கான கர்ம வினையையும் – முன்னோர்கள் செய்த பாவத்தால் உண்டான வினைப்பயனையும் – தெய்வ தோஷங்களையும் மற்றும் பல தோஷங்களையும் கண்டறிய பல முறைகளில் பிரசன்னம் போடப்படுகிறது. இதில் தானிய பிரசன்னம், தாம்பூல பிரசன்னம், ஹோரா பிரசன்னம், ஆரூட பிரசன்னம், சோழி பிரசன்னம், கேரள அஷ்ட மங்கள பிரசன்னம், நாடி பிரசன்னம், நிமிர்ந்த பிரசன்னம், கெளரி பிரசன்னம், கடிகார ஆரூடம், ஜாமக்கோள் ஆரூடம், சகால ஹோரை ஆரூடம், சகாதேவர் பிரசன்னம், நட்சத்திர பிரசன்னம் என பல வகைகள் உள்ளது. அஷ்ட மங்கள பிரசன்னத்தின் மூலமாக தெய்வ அனுகூலம் குலதெய்வ அனுகூலம் சர்ப்ப தோஷம் பிதுர்தோஷம் அதாவது மூதாதையர் தோஷம் குரு சாபம் பிராமண சாபம் வசிக்கும் இடத்தில் உள்ள பிரேத தோஷம் செய்வினை தோஷம், இடத்தில் உள்ள தோஷங்கள் இடுமருந்து தோஷம் (கைவிஷம்) போன்ற தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் எந்த காரியத்தை எடுத்தாலும் தடைகள் வருவது – துர்மரணங்கள், வீட்டில் ஆண்வாரிசு இல்லாமல் போதல் போன்ற எளிதில் கண்டூபிடிக்க முடியாத சில விஷயங்களை அறிந்து கொள்ள இயலும். குறிப்பாக இடுமருந்து தோஷத்திற்கு கருட பஞ்சாட்சர மந்திரத்தை பஞ்சகவ்யம் நெய்யில் தினமும் ஆயிரத்தெட்டு உரு வீதம் நாற்பத்தொரு நாள் செய்து கொடுத்தால் இந்த தோஷத்தைக் கட்டுப்படுத்தும். அஷ்ட மங்கள பிரச்சன்னம் பார்த்து அதன்மூலம் பரிகாரம் செய்ய வேண்டியிருப்பின் ஆறு மாதத்திற்குள் செய்து விட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் அஷ்ட மங்கள பிரச்சன்னம் பார்க்க வேண்டும்.

தாம்பூல பிரசன்னம்

அமர கோசம் நூலின் கருத்துப்படி தாம்பூலம் என்று அழைக்கப்படும் வெற்றிலை கொடி நாகலோகத்தில் உண்டானது அதற்கு நாகவல்லி என்று பெயர்.அது மகா லட்சுமி அம்சமாகும். தாம்பூலத்தின் பின்பக்க இடதுபுறமும், தாம்பூல மத்திய பாகமும் இவை இரண்டும் சிவபெருமனைக் குறிக்கும். வெளிப்பக்கம்(உள்) வெற்றிலையின் மத்திய பாகம் சந்திரனைக் குறிக்கும். ஜோதிட வல்லுநர்கள் 6 அங்குல நீளம் 2 அங்குல உள்ள வெற்றிலையின் அடிப்படையில் பிரச்சனைக்கு உரிய பதிலைக் கூறுவது. வெற்றிலையை ஆராய்ந்து பலன் கூறும் விதம்:
1. வெற்றிலையின் மொத்த எண்ணிக்கை 24க்கு மேல் எனில்,பூர்வீக இடத்தை விட்டு வந்து இங்கு 2 தலைமுறையாக வாழ்கிறார்கள்.
2. அடிப்பாகம் பெரிய நரம்பு உள்ள பகுதி துவாரம் :கர்ப்பிணி பெண் மரணம்.
3. நடுவில் துவாரம் : துர்மரணம் அடைந்த பிரேத தோஷம் உண்டு.
4. தாம்பூலம் கிழிந்து இருந்தால் : பூர்வ புண்ணியம் தோஷம் உண்டு. இறந்த பிரேத தோஷம் – சர்ப்ப தோஷம்.
5. நுனிப்பகுதி கிழிந்திருந்தல் : தோஷம் யக்ஷிகளால் துன்பம் இவாறு கூறிக்கொண்டே போகலாம்

ஜாமக்கோள் பிரசன்னம்

பூமியின் வெளிபரப்பும் அதன் மேல்படும் கதிர்களையும் ஆராய்ந்து ஜீவராசிக்கும் அண்டவெளிக்கும் தொடர்பு இருப்பதை உணர்ந்த சித்தர்களும் ஞானிகளும் வானமண்டலத்தில் ராசிமண்டலங்களும் ஒன்பது கோள்களும் 27 நட்சத்திரங்களும் இருப்பதை ஆராய்ந்து சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் சஞ்சாரம் செய்வதை உணர்த்து. நம் முன்னோர்கள் விட்டுசென்ற திதி, யோகம், கரணம், அயனம் போன்ற கால அளவுகளை ஆராய்ந்து சிறந்த ஒரு வான சாஸ்திரத்தை உருவாக்கினார் ஆரியபட்டர். ஆரம்ப காலத்தில் மனிதன் வழிப்போக்கில் சென்று கொண்டிருக்கும்போது எந்த திசையில் இருந்து கேள்வி கேட்கிறார்களோ அந்த திசையையும் அதற்கு எதிர் திசையில் உள்ள சகுனத்தையும் வைத்து பலன் சொல்லி வந்தார்கள் மற்றும் தனக்கு முன்னாள் உதயமாகும் நிமித்தத்தை வைத்தும் பலன் சொல்லாம். 'ஜாமம்' என்பது தமிழில் 'யாமம்' என பொருள்படும். ஒரு ஜாம நேரம் 1 மணி 30 நிமிடங்கள் (90 நிமிடங்கள்) ஆகும். பகல் பொழுதுக்கு 8 ஜாமம், இரவு பொழுதுக்கு 8 ஜாமம் என பிரித்து அவற்றை எட்டு திக்குகளுக்குள் நிறுத்தி அவற்றில் 8 கிரகங்களையும் உதய ஆரூட கவிப்பினையும் ஓடவிட்டு பலன் சொல்லும் ஒரு எளிமையாக கையாளக்கூடிய துல்லியமான பிரசன்ன ஜோதிட முறையாகும். ஜாமக்கோள் பிரசன்னத்தின் மூலம் மக்களின் அன்றாட நிகழ்வுகளில் ஏற்படும் வாழ்வியல் பிரச்சனைகள் எதுவானாலும் அதை ஆய்வு செய்யகூடிய கணித முறைகள் உண்டு. காணாமல் போனவர், தொலைந்து போன பொருள், தொழிலில் வெற்றி தோல்வி, திருமணத்தை பற்றி, குழந்தையை பற்றி இது போன்ற எந்த கேள்வி அனாலும் நடக்குமா? நடக்காதா? எப்போது நடக்கும்? என்பதை துல்லியமாக கூறமுடியும்.

ஜாதகம்

ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்றால் அது எந்த நாளில் எந்த நேரத்தில் பிறந்திருக்கிறது. அது எந்த ஊரில் பிறந்திருக்கிறது என்பதைப் பார்த்து அந்த ஊரை முக்கியமாகக் கொண்டு அந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எத்தனை எத்தனை டிகிரியில் அமைந்துள்ளது என்பதை கணித்து 12 கட்டங்களில் குறித்து தருவார்கள். அதை ராசிக் கட்டம் என்று சொல்வார்கள். அதைத்தான் நாம் ஜாதகம் என்றும் சொல்லி வருகிறோம்.நமது பூமியை ஆதாரமாக (reference) வைத்து, பூமியைச் சுற்றியுள்ள அண்ட வெளியை (zodiac) 12 பாகங்களாகப் பிரித்து (12 ராசிகள்), எந்த கிரகம், எந்த பாகத்தில், அன்றைய தினத்தில், நேரத்தில் உள்ளது என்பதையே ராசி சக்கரம் (ராசிக் கட்டம்) உணர்த்தும். ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை வானத்தில் எந்த ராசியைப் பார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம். ஜாதகன் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய தசாதான் ஜாதகனின் ஆரம்ப தசா, அதை அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக் கொண்டே வரும் மொத்த தசா காலம் 120 ஆண்டுகள். ஒவ்வொரு தசாவையும் மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும். அதற்கு புத்தி என்று பெயர் (Sub period). ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான் தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்

மருத்துவ ஜோதிடம்

ஜோதிடத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. மருத்துவ ஜோதிடம் அவைகளில் ஒரு பிரிவாகும். சித்த மருத்துவத்தில் நாடி பார்த்து, நடை பார்த்து,முகம் பார்த்து,கை பார்த்து,உடல் பார்த்து நோய் கண்டறிகிறார்கள். ஹோமியோபதி மருத்துவத்தில் உச்சி முதல் உள்ளங்கால் வரை தோன்றும் அறிகுறிகளையும்,மனதில் தோன்றும் எண்ணங்களையும் ஆராய்ந்து நோய் கண்டறிகிறார்கள்.அலோபதி மருத்துவத்தில் பல்வேறு ஆய்வுகூட சோதனைகள் செய்து நோய் கண்டறிகிறார்கள்.இது போல் ஜோதிடர்கள் தனி நபர் ஜாதகங்களை ஆய்வு செய்து நோய் கண்டறிவது சாத்தியமே. சித்த மருத்துவர்களும்,ஆயுர்வேத மருத்துவர்களும், காலமறிந்து சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்கள்.இவர்களில் பெரும்பாலோர் ஜோதிடம் அறிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஜோதிடம் மூலம் நோய் கண்டறிவது எப்படி என்பதை விளக்குவது மருத்துவ ஜோதிடமாகும்

வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து என்பது மனிதனைக் குறிக்கும் ஒரு சொல். இதனால்தான் வாஸ்துக்குரியவனை வாஸ்து புருஷன் என்கிறோம். வாஸ்து ஒரு இடத்தில் எப்படி செயல்படுகிறது என்பதை அர்த்த சாஸ்திரம் சொல்கிறது. வாஸ்து சாஸ்திரம் ஒரு மனித சாஸ்திரம். இது மனிதனை மையமாகக் கொண்டு மனிதர் பழக்க வழக்கங்கள், அவர்கள் வாழக்கூடிய இடங்களைக் கொண்டு கணிப்பது. மனித சாஸ்திரத்தை வீடு கட்டுவதற்கும், வீட்டில் குடியிருப்பதற்கும் பார்ப்பது சரியல்ல. வீட்டிற்கும் வீட்டின் அமைப்பிற்கும் பொருத்தமானது மனை விதி சாஸ்திரம்தான். மனிதப் பிறப்பில் அவருடைய பாவ புண்ணியங்களுக்கேற்ப அவர் எடுத்த கர்மா (பிறப்பு)வின் படி அந்த மனிதனின் வாழ்க்கை அமையும். இதுபற்றிக் குறிப்பிடுவதுதான் வாஸ்து சாஸ்திரம். இதற்குத் துணையாக இருப்பது மனை விதி சாஸ்திரம். வாஸ்து புருஷ லட்சணம் என்பது மனிதனின் பாவ புண்ணியத்திற்கேற்ப கோள்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இதை வாஸ்து நிர்ணயிப்பதில்லை. இணை விதி நிர்ணயிப்பது இல்லை. கோள்கள் வாஸ்துவை இயக்குகின்றன. கோள்கள் மனையை அமைத்துத் தருகின்றன. இப்படித்தான் வாழ வேண்டும் என பிறப்பின் போதே கோள்கள் நிர்ணயித்து விடுகின்றன. மனிதன் இதை விடுத்து வேற்றிடங்களில் வாழ முடியாது. வீட்டை மாற்றினால் கோள்கள் நிலை மாறுமா? ஏற்கனவே கோள்களின் நிலை நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதை மாற்றி விடலாம் என நினைப்பது மனிதனின் அறியாமை ஆகும்.

Guruji Videos

நோயின் தீவிரத்தை தவிர்க்க
சந்திரமங்கள யோகம்

Map For Guruji's Jothida Maiyam

Chennai - Sri Sungv Jothida Maiyam

Coimbatore - Sri Sungv Jothida Maiyam

Chennai Address


Nallaneram Nagaraj
Sri Sungv Prasanna Jyothida Mayyam
8/13, NCBS Colony,
2nd Main Road
Near Hyagrivar Temple
Raja Bhavan, Nanganallur
Chennai-641004
(00) 91 - 9600983103, 9442751234

Coimbatore Address


Nallaneram Nagaraj
Sri Sungv Prasanna Jyothida Mayyam
#600, V.K.Road,
(pioneer mill road)
Peelamedu,
(near pattalamman temple),
Coimbatore-641004
(00) 91 - 9600983103, 9442751234

Madurai Address


Nallaneram Nagaraj
Sri Sungv Prasanna Jyothida Mayyam
Suguna Store Bus Stop,
440, Senthil Nathan Street
(Near Yanakulai Manmark Arisi Kadai),
Madduthavani,
Madurai
(00) 91 - 9600983103, 9442751234

Bangalore Address


Nallaneram Nagaraj
Sri Sungv Prasanna Jyothida Mayyam
Maple Suites(Corporate Residence),
576/49, 4th Main
4th Block 1st stage, HBR Layout
(Opp: Regency Magnum apt),
Bangalore-560043
(00) 91 - 9600983103, 9442751234